தகவல் அறியும் உரிமைச் சட்டம்: வடக்கில் இராணுவத்தால் சுவீகரிகப்பட்ட காணி விபரங்களை கோரியுள்ள இளைஞர் வலையமைப்பு!

Samakalam, 21 February 2017

img_3697தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வடபகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு இளைஞர் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்ப படிவங்களை தபால் மூலம் நேற்று அனுப்பி வைத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தங்களது பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியின் அளவுப்பரிமானம் (ஏக்கர்) என்ன?, மேற் குறித்த காணியின் உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி, தங்களின் பிரதேசத்திற்குள் தனியாட்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள அரசகாணியின் அளவு யாது?

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணியை இழந்தவர்களின் எண்ணிக்கை?, பெயர் விபரம், முகவரி மற்றும் கிராம சேவையாளர் பிரிவு என்பவற்றை காணி சுவீகரிப்பு தொடர்பாக அறியும் நோக்குடன் கோரியுள்ளது.

இது தவிர, குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனவர்களின் பெயர், முகவரி மற்றும் குறித்த குடும்பத்துடன் தொடர்பு கொள்ள கூடிய தொடர்பு இலக்கம் என்பவற்றை கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் தருக, குறித்த குடும்பத்தின் தற்போதைய குடும்ப பிரதானியின் முழுப்பெயரினையும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும் தருக என காணாமல் போனோர் தொடர்பான விபரங்களையும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s