காணி விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம்

IBC Tamil, 22 February 2017

தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் கீழ் தாம் குடியிருக்கும் காணிகளின் விபரங்களை கோரி 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 27  – 15 வருடங்களாக தாம் நிரந்தரமாக குடியிருக்கும் காணி உரிமையாளர்களின் விபரங்களைக் மக்கள் கோரியுள்ளனர்.

நீண்டகாலமாக இக் காணிகளில் மக்கள் குடியிருக்கின்றபோதும் அவர்களது காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

downloadஇதனால் அப்பகுதி காணிகள் யாருடைய பெயரில் உள்ளன?, நீண்டகாலமாக அதில் வசிக்கும் தமக்கு அக்காணிகள் வழங்கப்படாமைக்கான காரணம் என்ன.? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெற்று 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விபரங்களைக் கோரியுள்ளனர்.

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவின் நெளுக்குளம், ஊர்மிளாக்கோட்டம், காத்தான்கோட்டம், ஈசன்கோட்டம், அம்பிகைபாலன் கோட்டம், தாஸ்கோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு விண்ணப்பங்களைக் கையளித்துள்ளனர்.

download-1குறித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேசசெயலக நிர்வாக உத்தியோகத்தர் அ.ஜெயரட்ணம் அவர்கள், 14 நாட்களுக்குள் இது தொடர்பில் தெரியப்படுத்துவதாக கூறி, அவர்களது விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டமைக்கான பதில் கடிதத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s